தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது “தானியங்கி ஒற்றைச்சாளர கட்டிட அனுமதி முறை மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனிமேல் நேரில் வர தேவையில்லை. ஏனெனில் உரிய ஆவணங்களை இணையத்தளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையிலே அனுமதி பெறலாம்.
அனைத்து அனுமதிகளையும் ஒரே சமயத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனை முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக பேருராட்சி, ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.