இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், செய்யும் ஒரு சில செயல்களினால் பேராபத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரை கூட இழந்து வருகின்றனர். அந்தவகையில் இளைஞர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோவானது இணைய சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அந்த நபர் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்கிறார். அப்போது முன் டயரை தூக்கி பைக்கை ஓட்டிச்செல்லும் போது முன்னே சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரியில் மோதி வெடித்து சிதறுகிறது. இளைஞர்கள் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின் அறிவுரையின்படி கேட்டு நடக்கவேண்டும்.
#BeSafe💐
ऐसा मत करना😢😢😢😢Hero की Heropanti nikal gayi 😢😢😢@ipskabra @arunbothra @ipsvijrk pic.twitter.com/fHZ2mo7Rgb
— Rupin Sharma IPS (@rupin1992) October 27, 2021