அதிமுகவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின் இரட்டை தலைமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுகவை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் தற்போது இல்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கட்சியைக் கட்டிக் காக்கக்கூடிய ஒரு ஆளுமை மிக்க தலைவர் தான் தேவை.
அதை தான் பொதுமக்களும் உறுப்பினர்களும் விரும்புகிறார்கள். அதனைத் தொடர்ந்து சிலர் மீது கொண்ட அன்பால் மக்கள் சிறிது காலம் அவர்களை ஆதரிக்கலாம். ஆனால் இன்று கட்சிக்கு மிக அற்புதமான தலமையை எடப்பாடியால் மட்டுமே தர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.