ஒற்றை தலைமைக்கு தற்போது என்ன அவசியம் வந்தது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்.
ஏழை, எளிய மக்களின் நலன் காக்கவே அதிமுக உருவாக்கப்பட்டது. ஒற்றை தலைமைக்கு தற்போது என்ன அவசியம் வந்தது?, பொதுக்குழு என்ற பெயரில் இபிஎஸ் தரப்பினர் நாடகம் நடத்தியுள்ளனர். இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும், பலர் என பக்கம் வர உள்ளார்கள் அது யார் என்பது பரம ரகசியம், கட்சியின் நலன் கருதி சசிகலா,டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.