அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் இபிஎஸ் தரப்பு ஒப்படைத்துள்ளது. இதில் டுவிஸ்ட் என்னவென்றால் ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை.
இதனால் ஒபிஎஸ் தரப்பு கொஞ்சம் பெருமூச்சு விட்டுள்ளது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பை பொதுக்குழுவுக்கு வரவழைத்து அங்கு ஒற்றை தலைமை குறித்து தனித் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.