Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை…..! ADMKவில் பதவிக்கு அமைச்சர் போட்டி….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனால் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 23 தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்ற கூடாது என்ற உத்தரவு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு பின் நடக்கும் பொதுக்குழுவுக்கு பொருந்தாது என்று கூறியிருந்தது. இப்படி அதிமுகவில் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை உருவாகி வருகிறது. இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறியவர் எம்ஜிஆர் காட்டிய வழியில் அதிமுக பொது குழு நடைபெற வேண்டும். அதிமுக தலைமை தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். நான் யாருக்கும் ஆதரவு இல்லை. ஓபிஎஸ் இபிஎஸ் மட்டும் தான் அதிமுகவில் இருக்கிறார்களா? பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும். அதில் நான் நிற்பேன். என்னைப் போன்ற நூறு பேர் நிற்பார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் தலைமை ஏற்க்கட்டும் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |