Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை….. ” ADMK அலுவலகத்தில் அடிதடி”….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |