Categories
தேசிய செய்திகள்

ஒற்றை பெண் குழந்தைகள்… உதவித் தொகை திட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

நாட்டில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தின் விண்ணப்ப பணியை சிபிஎஸ்இ தொடங்கி வைத்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை திட்டங்களை பெறுவதற்கு தகுதியானவர்கள். இதில் தகுதியுள்ள மாணவிகள் www.cbse.nic.in என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 28 ஆகும்.

மேலும் பத்தாம் வகுப்பு தேர்வில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்கு தகுதியானவர்கள். இந்திய குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள்.

Categories

Tech |