லண்டனில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜோன் கெடெர்ட் தனக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.
லண்டனில் கடந்த 2012 ஆம் வருடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் fears five என்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோன் கெடெர்ட் தங்கம் வென்றிருந்தார். இவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு ஆளானார். இது தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஜோன் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் ஜோன் விளையாட்டு வீரர்கள் நூற்றுக்கணக்கானவர்களை தவறாக பயன்படுத்திய அணியின் மருத்துவர் லோறி நாசர் என்பவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில் நீதிமன்றங்களின் ஆவணங்கள் ஜோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்படி 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் காவல் அதிகாரியிடம் பொய் கூறியது போன்ற பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இதனால் தற்கொலை செய்துகொண்ட ஜோனின் உடல் வியாழக்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.