நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 11 பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதனால் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.