ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ சார்பில், ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியாவுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும். மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி பரிசு வழங்கப்படும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.