Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம்….. தீபக் புனியா தோல்வி…..!!!!

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
கால் இறுதியில் சீன வீரர் சூஷென் லின் 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்தவர் அட்டகாச கம்பேக் கொடுத்து வெற்றி. கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றார்.அரையிறுதியில் தீபக் புனியா  அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லரிடம் 10-0 என்ற கணக்கில் தீபக் தோல்வியடைந்தார். அரையிறுதியில் தோற்றதால் வெண்கல பக்கத்திற்கான ரெப்பசேஜ் சுற்றில் தீபக் புனியா விளையாட உள்ளார்.

Categories

Tech |