Categories
கால் பந்து விளையாட்டு

ஒலிம்பிக் கால்பந்து போட்டி நிறைவு…இந்திய ஆண்கள் பிரிவில் பதக்கம்!!..

சென்னையில் நடைபெற்ற சிறப்பு  ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் நிறைவு பெற்றன.

ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஆண்களுக்கு மூன்று பிரிவுகளாகவும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளாகவும் நேரு உள்விளையாட்டு அரங்கில்  மூன்று நாட்களாக நடைபெற்றது.  இதில் ஆண்கள் “A” பிரிவில்  இடம் பெற்றிந்த இந்தியா 1வது அணி மூன்றாவது இடத்தையும் “B” பிரிவில் இடம் பெற்றிந்த இந்தியா 2 வது அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

பெண்களில் “A” பிரிவில் ரஷ்யா முதலிடத்தையும்”B” பிரிவில் இந்தோனேசியா முதல்  இடத்தையும்  பெற்றுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து தலைவர்  அமர் பிரசாத் ரெட்டி ,சென்னை  எஃப்.சி அணி  கால்பந்து தலைவர் தனபால் கணேஷ் , பளுதுக்கும் வீராங்கனை  ஆர்த்தி மற்றும் அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கினர்.

Categories

Tech |