ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசும் விசேஷ சீருடையும் நினைவுப் பரிசாக வழங்கி சிஎஸ்கே நிர்வாகம் கவுரவித்துள்ளது.
டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று அசத்தினார். இதையடுத்து இவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் பலரும் பரிசுகளை அள்ளி வழங்கினர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 8758 என்ற எண் கொண்ட விசேஷ சீருடையுடன் ஒரு கோடி ரூபாய் பரிசும் வழங்கி கௌரவித்தது.