Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு… பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்…?

ஜப்பான் டோக்கியோவில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஜூலை 23-ம் தேதி தொடங்கிய 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவடைந்தன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடமும் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் போட்டியை நடத்தும் ஜப்பான் 3வது இடமும் பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடம் பெற்றது.

Categories

Tech |