Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டியிலிருந்து சீனாவை நீக்க அமெரிக்‍கா வலியுறுத்தல் …!!

கொரோனா வைரஸை உலகநாடுகளுக்கு பரப்பியது உய்குர் முஸ்லிம்களை அடக்குமுறை ஆளாக்கியது. தொடர்பாக சீனா ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸை அமெரிக்காவிலும் இதர நாடுகளிலும் பரப்பி அதற்கு சீனா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு கொரோனா தோன்றியது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் வெளிப்படையற்ற தவறான செயல்பாடுகளால் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உலக அளவில் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளதோடு உலக நாடுகளில் பொருளாதார பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா செய்த குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைப்போம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் அடக்கு முறைக்கு ஆளாகி வருவது மற்றும் கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பியது தொடர்பான கண்டன தீர்மானத்தை விரைந்து நிறைவு ஏற்றும்படி அமெரிக்க செனட் உறுப்பினர் ரிக்ஸ் கார்ட் வேலி உறவுக்கான செயற்குழுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த தீர்மானத்தில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து சீனாவை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |