Categories
உலக செய்திகள்

“ஒலிம்பிக் போட்டி”… ஒத்திவைக்க முடியாது – ஜப்பான் அரசு திட்டவட்டம்..!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனோவின்  தாக்கம் காரணமாக இந்த  ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஷின்சோ அபே ஒப்புக்கொண்டுள்ளார்.  கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டிகள் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், வீரர், வீராங்கனைகளில் உடல்நிலை முக்கியம் என்பதால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |