32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 65 கிலோ எடைப்பிரிவில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஈரான் வீரரை வீழ்த்தி பஜ்ரங் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Categories