உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் நான்கு நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
Categories