Categories
மாநில செய்திகள்

ஒலிம்பியாட் பேனரில் மோடி படத்தை ஒட்டிய பாஜகவினர்…. பெரும் பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியால் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் ஏன் இடம்பெறவில்லை என்று பாஜகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் சென்னையில் ஒலிம்பியாட் போட்டிக்காக வைக்கப்பட்ட பேனர்களில் பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் ஒட்டி அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் பாஜகவினர் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள பேனர்களில் பிரதமர் படத்தை ஒட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |