காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் அருகே இருக்கும் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டனர். இதையடுத்து காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு 1/2 மணி நேரம் தாமதமாக வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியே வரும் காட்டு யானைகள் சாலை நடுவே நிற்கின்றன. காட்டு யானைகள் குட்டியுடன் நிற்கும்போது வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்ப கூடாது. மேலும் கவனமாகவும், மெதுவாகவும் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.