Categories
சினிமா

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பால் மரணம்…. சோகம்….!!!

சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோவை உருவாக்கினார். செம்மீன் படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன்கள் மூன்று பேரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |