ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்மையில் ஒன்றிய அரசு 1952ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என்று வெளியிட்டது.
இந்த வரைவு சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதால் இந்த வரை ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பான முயற்சிகளை கைவிடுமாறும் கோரியுள்ளார்.