Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒழுங்கா ஆடவே இல்ல…. “எப்படி ஆசிய கோப்பைல இடம் பிடிச்சாரு”….. முன்னாள் வீரரின் கேள்வி இதுதான்..!!

ஆசிய கோப்பையில் அஸ்வின் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்பது புரியவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண் மோரே கருத்து தெரிவித்துள்ளார்…

ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. துணை கேப்டனாக கே.எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். மேலும் ஃபார்ம் இல்லாத கோலியும் இடம் பெற்றுள்ளார்.

அதேபோல ஐபிஎல் தொடங்கி சமீபத்திய  தொடரில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்ட் பிரீட் பும்ரா, ஹர்சல் பட்டேல்  ஆகியோர் காயம் காரணமாக அணியில இடம் பெறவில்லை. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

அதே சமயம் இந்திய அணியில் முகமது சமி, அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இது பற்றி முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது தான் உண்மை.. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம் பெறக் கூடாது என்றும் சில கருத்துக்கள் வருகிறது.

இப்படி தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் தேர்வு செய்யப்படாத வீரர்கள் பற்றியும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில் தமிழக சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆசிய தொடரில்  சேர்க்கப்பட்டுள்ளது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஏனென்று பார்த்தால் 2017 ஆம் ஆண்டுக்குப் பின் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டியில் இருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்ட அஸ்வினின் கேரியர் காலி ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 4 ஆண்டுகள் கடந்து மீண்டும் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டார். அதில் அவருக்கு முழுமையாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், கிடைத்த வாய்ப்புகளை மட்டும் சரியாக பயன்படுத்தி அசத்தியதால்  அதன் பின்னர் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்று சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்..

அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் காயமடைந்ததன் காரணமாக வெளியேறிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தினார். குறிப்பாக பேட்டிங்கில் முதல் முறையாக அரைசதம் அடித்து ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்தார்.

இருப்பினும் அதன் பின் நடந்த தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அவரை தேர்வு குழு கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்தது. அந்தத் தொடரில் அஸ்வின் ஓரளவுக்கு சிறப்பாகவே பந்து வீசி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. அந்த 3 தொடரிலும் மூன்று விக்கெட்டுகளை 6.66 என்ற எக்கனாமியில் எடுத்ததன் காரணமாக அவர் ஆசியக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் சுழல் பந்து வீச்சாளராக யூஸ்வேந்திர சஹலும், ஆல்ரவுண்டர் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலும் அணியில் இருக்கும் போது தொடர்ச்சியாக விளையாடாத அஸ்வின் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது பற்றி கேள்வியை எழுப்பி இருந்தார்.. தற்போது அந்த வரிசையில் மற்றொரு முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே இணைந்துள்ளார்.

கிரண் பேசியதாவது, ஐபிஎல் புள்ளி விவரங்கள் சுமாராக இருக்கும் நிலையில் எப்படி ஆசிய கோப்பையில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். ஒவ்வொரு முறையும் அஸ்வின் எப்படி இந்திய அணிக்கு வருகிறார் என்பதை பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். கடந்த முறையும் உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட அவர் அதன் பின்னர் விளையாடவே இல்லை.. அவரது ஐபிஎல் புள்ளி விவரங்களை பார்த்தாலும் அவ்வளவு நன்றாக இல்லை. எனவே சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது சமி மற்றும் அக்சர் பட்டேலை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரையில் பார்த்தால் இந்த இருவரும் உலக கோப்பையில் விளையாட வேண்டும். ஏனென்றால் எனக்கு விக்கெட் எடுக்கும் பவுலர்கள் மட்டும் தான் தேவை. அந்த வரிசையில் சமி போட்டியின் அனைத்து இடங்களிலும் விக்கெட் எடுக்கும் நிலையில் திறமை வாய்ந்தவர். ஆனால் அஸ்வின் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்பது எனக்கு சுத்தமாக புரியவே இல்லை. எதற்காக அவர் இங்கிலாந்து தொடரில் ஆடாமல்  வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்டார் என்று அனைத்துமே குழப்பமாக உள்ளது. ஏனென்றால் உங்களிடம் முதலாவதாக ரவீந்திர ஜடேஜா, 2ஆவதாக சஹல் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோருடன் ரிசர்வ் வீரர்களும் இருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் 12 விக்கெட்டுகளை 7.51 என்ற எக்கனாமியில் எடுத்ததுள்ளார். அது மட்டுமில்லாமல்  பேட்டிங்கில் 191 ரன்களை 141.48 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |