தைவானுக்கு ஆயுத உதவி செய்ததால் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக சீனா மற்றும் தைவான் இடையே எல்லைப் பிரச்சனை உருவாகியுள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்வதால் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தைவானுக்கு தன்னுடன் இருக்கும் எல்லை பிரச்சனையினால் சீனா நாட்டின் எல்லையில் ஏராளமான ஆயுதங்களை நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து வான்வெளி தாக்குதல் ஏவுகணைகளை வாங்குவதற்கு தைவான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ஆயுதங்களை தைவானுக்கு விற்பதால் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானுடன் ஆயுத ஒப்பந்தம் போட்டு வியாபாரம் செய்யும் அமெரிக்காவிடமிருந்து இனி ஆயுதங்களை சீனா வாங்காது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.