செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் முட்டை அழுகிய நிலையில் உள்ளது. மாவட்ட சத்துணவு நிலை என்ன? எனும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர்,சத்துணவை பொறுத்தவரையில்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் குறிப்பாக பொன்மனச்செல்வன் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் தான் சிறுவயதில் அந்த பசியினுடைய துன்பத்தை அறிந்ததன் காரணமாக குறிப்பாக குழந்தைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக கொண்டு வந்த ஒரு மகத்தான திட்டம்.ஐ. நா. வினுடைய பாராட்டை பெற்றிருக்கின்ற ஒரு மகத்தான திட்டம். அந்த திட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அம்மாவினுடைய அரசும் சரி, புரட்சி தலைவர் அரசில் இருக்கும் போதும் சரி சிறப்பான முறையில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
ஆனால் திமுக அரசை பொறுத்த வரையில் புரட்சித்தலைவர் ஆரம்பித்த திட்டம் என்பதற்காக அதை எப்படியாவது சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக… அந்த திட்டத்தினுடைய நற்பெயருக்கு பொது மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இதுபோன்ற செயல்கள் எல்லாம் திமுக அரங்கேற்றுவது ஏற்று கொள்ள முடியாத செயல்.
எனவே ஒழுங்காக சாப்பாடு போடுங்கள். சாப்பாடு போடவில்லை என்றால் மக்களை திரட்டி வீதிக்கு வந்து போராடுகின்ற நிலையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதிற்கு ஏற்படுத்தாதீர்கள் என்று தான் நான் கேட்டு கொள்கிறேன் என எச்சரித்தார்.