Categories
லைப் ஸ்டைல்

ஒழுங்கா நைட் தூங்கிருங்க…. இல்லைனா அவ்வளவு தான்…. உங்களுக்கான எச்சரிக்கை ….!!

இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பது உடலுக்கு ஆரோக்கியம் கேடுகளை கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது

ஒரு நாளைக்கு நமது உடல் இரண்டு வேளை தூங்கும் விதமாகத் படைக்கப்பட்டுள்ளது. இரவு தூங்கும் போது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். காலையில் இருந்து மதியம் வரை கடுமையாக உழைப்பதால் மூளை அல்லது உடல் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள தானாகவே ஓய்வு கேட்கும். அந்த சமயத்தில் நமக்கு இருக்கும் வேலைகளை மறந்து குறைந்தது அரை மணி நேரம் தூங்கி எழுந்தால் மீண்டும் மூளையும் உடலும் சுறுசுறுப்பாகிவிடும்.

பகலில் நாம் தூங்கும் அரை மணி நேரத் தூக்கம் நமது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. காலையில் சீக்கிரம் எழுந்து யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதனால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அதற்கு இரவில் சீக்கிரம் தூங்க வேண்டியது அவசியம். இரவு கண்விழித்து நீண்ட நேரம் வேலை செய்தால் உடலில் சூடு ஏற்படும். இதனால் பல வியாதிகள் வரக்கூடும். குறிப்பாக மூளையும் கண்களும் பாதிக்கப்படும்.

அதிகாலை எழுவதால் நமது உடலுக்கு அத்தியாவசியமான தேவையாக இருக்கும் வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும். இரவு தாமதமாக தூங்கி அதிகாலை கண் விழிக்கவில்லை என்றால் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி சத்து கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமன்றி காலம் தாழ்த்தி தூங்கி எழும்போது மனக்குழப்பங்கள், மன அழுத்தங்களும் இருக்கும். தூங்கும் முறையை சரியாக கடைபிடித்தால் இந்த பிரச்சினையை தவிர்க்க முடியும்.

Categories

Tech |