வியாபாரியை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை மார்க்கெட்டில் வேல்முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் வெல்முருகன் காய்கறி வியாபாரம் செய்யும் பிரபாகரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரிடம் ஒரு லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக வேல்முருகன் வாங்கிய பணத்திற்கு உரிய வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகனிடம் கேட்டபோது மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரபாகரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் இணைந்து வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வேல்முருகன் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.