Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொருவரிடமும் கண்டிப்பாக ஒமைக்ரான் வந்து செல்லும்…. தலைமை மருத்துவர் சொல்லும் பகீர் தகவல்….!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் கூறுகையில், ஒமைக்ரான் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க முடியாதது. அனைவரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு நிச்சயமாக வந்து செல்லும். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் புதிய திரிபு லேசானது. இந்த வைரஸ் வேகமாக பரவினாலும்  பாதிப்பை ஏற்படுத்தாது.

நம்மில் பெரும்பான்மையானவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அறிய மாட்டோம். 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு எப்போது ஏற்பட்டது என்பது கூட தெரியாது. தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நாட்டில் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றின் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதனால்தான் இந்தியா மற்ற நாடுகள் போல் மோசமாக பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |