அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கும் அதிபர் ஜோ பைடன் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது.
இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை, அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா ஒரு லட்சம் கொரோனா நிதி வழங்கும் அமெரிக்க அதிபரின் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கரமாக நிறைவேறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மக்கள் அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர்.