ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த நாள் ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.