ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு மாதங்களாக இந்தியா ஒரு நிலையான சூழ் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், ” பண்டிகை காலங்களில் சந்தைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஊரடங்கு முடிந்துவிடலாம். ஆனால் கொரோனா இன்னும் முடியவில்லை என்று அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு மாதங்களில் இந்தியா ஒரு நிலையான சூழ்நிலையில் இருக்கிறது. அது வீழ்ந்து போக நாம் விட்டு விடக்கூடாது.
நம் நாட்டில் குணமடைந்து விகிதம் நல்ல முறையில் இருக்கிறது. உயிரிழப்பு விகிதமும் மிகக் குறைவு. இந்தியாவில் மொத்தம் 10 லட்சம் மக்கள் தொகையில் 5,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகின்றது. மற்ற நாடுகளில் பாதிப்பு 25 ஆயிரமாக இருக்கிறது. இதனைப் போன்றே உயிரிழப்பு 10 லட்சம் மக்கள் தொகையில் 83 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்ற நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை 600 க்கு கூடுதலாக இருக்கிறது.