அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்த படியே தனது அனைத்து பணிகளையும் ஜோபைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் நன்றாக உணர்கின்றேன் என ஜோபைடன் கூறியுள்ளார். கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்றபின் பேசிய அவர் இப்படி கூறியுள்ளார். மேலும் தொற்று மாறுபாடுகளுக்கு எதிராக மிகவும் திறம்பட பாதுகாக்க கூடிய புதிய தடுப்பூசிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்க இன்று ஒரு உச்சி மாநாட்டை நடத்த வெள்ளை மாளிகை திட்டமிட்டு இருக்கிறது.