Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஒவ்வொரு மனிதனின் தலைக்கும் ரூ 57,000 கடன்” ஸ்டாலின் அதிருப்தி …!!

ஒவ்வொரு மனிதனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் சுமத்தப்படுகிறது என்று பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக  அமைந்திருக்கிறது.இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடன் சுமையை பொருத்தவரைக்கும் 4 இலட்சத்து 56 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் சுமத்தப்படுகிறது. நிதிநிலை அறிக்கை பொறுத்தவரை முதலமைச்சரின் இலாகா , வேலுமணி இலாகா , தங்கமணி இலாகா என அதிகமான அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மர்மமாக இருக்குகின்றது என்று ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |