விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மகாலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, ஜி பி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏ டி கே ராம், ராமசாமி, மணிகண்டன், ஹரீனா, ஆயிஷா, சிவன், கணேசன், அசல், தனலட்சுமி, நிவா குயின் சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டில் உள்ளே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடிகை மைனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தினம்தோறும் ஒவ்வொரு பிரச்சனையுடன் ப்ரோமோக்கள் வெளியாகின்றது. இந்த சூழலில் 13வது நாளான இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் அசீமை அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றார்கள். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முன்பு சில சிவப்பு கார்டுகள் இருக்கிறது இந்த கார்டுக்கு தகுதியானவர் இந்த வீட்டில் யார் என்பதை தேர்ந்தெடுங்கள் என தொகுப்பாளர் கமல்ஹாசன் கூறுகின்றார்.
அப்போது முதலில் வந்த விக்ரமின் சிவப்பு கார்டை எடுத்து அசீமிற்கு கொடுத்துவிட்டு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கு அந்த கண்ணியத்தை அந்த மனிதருக்கு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பலரும் அசிமிற்கு ரெட் கார்டை வழங்கியுள்ளனர் இத்துடன் இந்த பிரமோ முடிவடைகின்றது. இதற்கு முந்தைய நாளில் விக்ரமனை அசின் ஒருமையில் வாடா போடா என்று பேசியதன் மூலம் பிக் பாஸ் வீட்டினுள் பூகம்பம் வெடித்துள்ளது இதன் வெளிப்பாடாகவே தற்போது வெளியாகியிருக்கிறது ப்ரோமோ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.