Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 பென்ஷன் பெற…. அருமையான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

அரசு காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி பல காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள சரல் பென்ஷன் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சம் 80 வயது. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. அதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, அருகில் உள்ள எல்ஐசி ஏஜென்ட் தொடர்பு கொண்டு சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இல்லையென்றால் www.licindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்ய முடியும். இந்த ஒரு பிரீமியம் மட்டும் செலுத்தினால் போதும். அதன்பிறகு ஆண்டு சந்தா செலுத்த வேண்டும்.

ஆண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, காலாண்டு வாரியாக மற்றும் மாத வாரியாகவும் சந்தா செலுத்தலாம். அதன்படி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அரையாண்டுக்கு ரூ.6000, காலாண்டுக்கு ரூ.3000, மாதத்திற்கு ஆயிரம் ரூபாயாகவும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலமாக மாதம் 12  ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.

Categories

Tech |