மத்திய அரசின் சார்பாக தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டம்.கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் வாழ்க்கையை வாழ இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். திருமணமானவர்கள் தங்களது வாழ்க்கைத் துணைக்கு கடைசி காலத்தில் உதவி செய்ய நினைத்தால் இந்த திட்டத்தில் உடனே முதலீடு செய்யுங்கள். அவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். ஆனால் நீங்கள் 30 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம்.
ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 30 ஆண்டுகளில் 10 சதவீத வட்டியில் மொத்த பென்ஷன் தொகை 1,11,98,471. ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகையாக ரூ.44,793 கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு தகுதி உண்டு. குறைந்தபட்சம் 250 ரூபாய் தொடங்கி நீங்கள் முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இதில் இல்லை. முதலீட்டு தொகையை பொருத்து முதிர்வு தொகை பங்குச் சந்தையுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.