தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா ? போன்ற விவாதங்கள் எழுந்த நிலையில் தற்போது ஊரடங்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவரான பிரதீப் கவுர் தற்போது போது ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவில் அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை பொறுத்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல மருத்துவ நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் பார்த்தோமென்றால் மாவட்ட அளவில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ?
TN Govt will take a decision on restrictions or lockdown based on the district level situation. Expert group recommended that analysis of various epidemiological indicators and field situation might be considered while making the decision
— Prabhdeep Kaur (@kprabhdeep) June 29, 2020
அங்கு எவ்வளவு பாதிப்பு உள்ளது ? என பரிசீலித்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை எடுக்கும் என்ற ஒரு விஷயத்தை தற்போது டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் தொடர்பான தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று தற்போது தெரிகின்றது. பிரதீப் கவுர் ட்விட்டின் கருத்தை வைத்து பார்த்தால் மாவட்டம் வாரியாக, கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் முடக்கம் இருக்கும் என்று தெரிகின்றது.