ஜாமினில் வெளிவந்த ஆரியன் கானுக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஆரியன் கானுக்கு நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவின் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையான ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரியன் கான் போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தொடர்புடைய மற்ற குற்றவாளிகளுடன் பேசுவதற்கு முயற்சி செய்யக்கூடாது.
அவரின் பாஸ்போர்ட் உடனடியாக சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அந்த ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினரின் அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.