Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒவ்வொரு வீரருக்கும் அது ஒரு கனவு…. இன்னும் மேட்ச் இருக்கு….. 2023 உலககோப்பைல ஆடுவேன்…. நம்பிக்கையுடன் ஷர்துல்..!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்..

இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தற்போது ஷிகர் தவான் தலைமையிலான அணியின் ஒரு பகுதியாக உள்ளார், அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறார்.

ராஞ்சியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் 2வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷர்துல் தாக்கூர், தங்கள் நாட்டுக்காக உலகக் கோப்பையை விளையாடுவதும் வெல்வதும் ஒவ்வொரு வீரரின் கனவு என்றும், இந்தியாவில் 2023ல் நடைபெறும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் களமிறங்குவேன் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “நிச்சயமாக, உலகக்கோப்பையை தவற விட்டது ஒரு பெரிய பின்னடைவு. ஒவ்வொரு வீரரும் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், விளையாடுவது மட்டுமல்ல, அந்த கோப்பையையும் வெல்ல வேண்டும். இந்த முறை நான் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இன்னும் நிறைய கிரிக்கெட் பாக்கி உள்ளது, அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும் உள்ளது. நான் எந்தப் போட்டியில் விளையாடினாலும் அதில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பங்களிப்பை வழங்குவதிலேயே எனது கவனம் இருக்கும்” என்றார்.

மேலும் அவர்  தேவை ஏற்பட்டால் அணிக்குள் வரத் தயாராக இருக்கிறேன். “காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும், ஒரு கட்டத்தில், யாராவது காயமடையப் போகிறார்கள், அதை நாம் நேர்மையாக இதயத்தால் எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்னும் நிறைய கிரிக்கெட் வர உள்ளது. “காயங்கள் ஏற்பட்டால் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வரலாம். இப்போதைக்கு, உங்கள் பொறுப்பு, எப்போது, ​​​​எங்கு விளையாடச் சொன்னாலும் தயாராக இருக்க வேண்டும். எனக்கு அழைப்பு கொடுத்தால் நான் மனதளவில் தயாராக இருப்பேன். எல்லாம் என் கையில்” என்று கூறினார்.

30 வயதான ஷர்துல் 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகளில் இடம்பெற்று ஆடியது குறிப்பிடத்தக்கது.

டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

உலகக்கோப்பை தொடரிலிருந்து பும்ரா காயத்தால் விலகியுள்ள நிலையில் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீபக் சாஹர் அவருக்கு பதில் இடம் பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் தற்போது முதுகு வலி காரணமாக தென்னாபிரிக்கா தொடரில் இருந்து விலகி உள்ளார். இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அக்டோபர் 23ஆம் தேதி தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |