Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே நெகனூர் அம்பேத்கர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக தாமோதரன் கஞ்சா விற்பனை செய்த போது காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன்பிறகு தாமோதரனை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

இவர் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற ஏராளமான வழக்குகள் காவல்துறையில் பதிவாகி உள்ளது. எனவே இவரை குண்டர்  சட்டத்தின்  கீழ் கைது செய்த காவல்துறையினர் முடிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா  மாவட்ட ஆட்சியர் மோகனிடம் பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் அனுமதி வழங்கினார். அதன்பிறகு குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |