இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்த பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 13-ஆம் தேதி பிரபாகரனை கற்பூர பிரியன், சபீன், கிருஷ்ண மூர்த்தி, சுரேந்தர் ஆகிய 4 பேரும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் 3 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கற்பூர பிரியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்காக போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிடம் பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் வழங்கியதால் கற்பூர பிரியன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதற்கான நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.