முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்குவதாக கூறி 3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இருப்பதற்காக அவர்களுக்கு விமான நிலையங்களில் லூக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை..
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கே.டி ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.. அதை தொடர்ந்து தற்போது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது..