Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓசியில் பயணம் வேண்டாம்” ஒட்டுமொத்த தமிழக பெண்களும் புறக்கணிங்க….. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தமிழக அரசால் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்கின்றனர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் இந்த ஓசி பயணத்தை புறக்கணிக்க வேண்டும். அந்த மூதாட்டி சொல்வது போல ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |