Categories
தேசிய செய்திகள்

ஓசூர் அருகே அடுத்தடுத்து நடந்த கோர விபத்து…. ஒரே நாளில் 5 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே மாலூர் சாலையில் பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த  சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாகலூரை சேர்ந்த அபீத்(21),சையப் (20) மற்றும் தருமபுரியை சேர்ந்த பூவரசன்(19) ஆகிய 3 இளைஞர்களும் கர்நாடகா மாநிலம் மாலூரிலிருந்து ஓசூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

பாகலூர் அருகே தனியார் தொழிற்சாலை  முன்பாக 4 பயணிகளுடன் வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர் மெகபூப்(35) கை முறிவு ஏற்ப்பட்டுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இன்று காலை, சூளகிரியில் 2கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஓசூர் பகுதியில் இன்று ஒரே நாளில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5 ஆக  அதிகரித்துள்ளது  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |