ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது என அறிமுக இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழில் அறிமுக இயக்குனர் செல்வகுமார் செல்லபாண்டியன் இயக்கத்தில் வார்டு 126 என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாகவும், ரொமான்டிக் கதை அம்சத்துடனும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ஜிஷ்ணு மேனன், மைக்கேல் தங்கதுரை ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். அதன் பிறகு நடிகைகள் சாந்தினி, ஷ்ரிதா சிவதாஸ், வித்யா பிரதீப், சுருதி ராமகிருஷ்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் செல்வகுமார் முதலில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார். மேலும் படத்தை ஓடிடியில் எல்லோரும் ஈஸியாக வெளியிட்ட விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கும் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என இயக்குனர் செல்வகுமார் கூறியுள்ளார்.