Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகிறதா விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் படம்?… வெளியான புதிய தகவல்…!!!

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராக்கி படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Nayanthara & Vignesh Shivan To Present Arun Matheswaran's Rocky | RITZ

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ராக்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |