ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே, ஜெயில், பேச்சுலர் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐங்கரன் படத்தை ரவி அரசு இயக்கியுள்ளார் . இவர் அதர்வாவின் ஈட்டி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சித்தார்த்தா சங்கர், ஹரிஷ் பேரடி, ஆடுகளம் நரேன், ரவி வெங்கட்ராமன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
காமன் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஐங்கரன் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு மாதம் சோனி லிவ் ஓடிடியில் இந்த படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.