நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை வித்யாபாலன் காலா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் . இவர் ஹிந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் சக்சேனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
Fearless as she steps out into the world!
Happy to announce my latest film ‘Sherni’ @primevideoin
Meet #SherniOnPrime in June.
@tseriesfilms @TSeries @Abundantia_Ent@vikramix @ShikhaaSharma03 @AasthaTiku#AmitMasurkar pic.twitter.com/XDJubdPAt0— vidya balan (@vidya_balan) May 17, 2021
மேலும் இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனமும் அபன்டன்டியா என்டர்டைமெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜூன் மாதம் அமேசன் பிரைமில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.