Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் விஷ்ணு விஷால் படம்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதை தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார் . சமீபத்தில் இவர் நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்த காடன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Vishnu Vishal's 'FIR' teaser to be unveiled on January 26 | Tamil Movie  News - Times of India

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

Categories

Tech |